- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
முடிகொட்டுதல் முற்றிலும் நின்று முடி ஆரோக்கியமாக நன்கு வளர வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க!
இன்றைய காலகட்டத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் இருக்கும் ஒரு பெரிய problem முடி கொட்டுகிறது, மீண்டும் முடி வளரவில்லை என்பதே ஆகும். கல்லூரி பெண்கள் முதல் அனைத்து பெண்களுக்கும் இது ஒரு மன உளைச்சலை கூட உருவாக்குகிறது. இந்த பிரச்சனையை மிகவும் எளிமையாக பொருட்களை வைத்து எப்படி சரி செய்வது என பார்ப்போம்.
இப்போது, நாம் செய்யப்போவது ஒரு சிறந்த மருத்துவ குணம் நிறைந்த hair pack இதை எவ்வாறு செய்வது என பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
- கொய்யா இலை
- வெந்தயம்
- புளிச்ச அரிசி காஞ்சி
செய்முறை
இந்த செய்முறைக்கு முதலில் கொய்யா இலையினை இரண்டு கை பிடி அளவிற்கு கொய்யா இலையினை பறித்து வெயிலில் நன்கு காய வைத்து பொடி போல அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் இரண்டு ஸ்பூன் வெந்தய பொடியினையும் மற்றும் தேவையான அளவு அதனுடன் புளிச்ச அரிசி கஞ்சியினையும் போட்டு நன்கு கலக்க வேண்டும். பிறகு இந்த கலவையை பத்து நிமிடம் கழித்து பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
பயன்கள்
வெந்தயம்
வெந்தையம் முடி வளர்ச்சிக்கு மிகவும் அற்புதமான பொருள் ஆகும். இது முடியின் வேர் கால்களை சுத்தபடுத்தி ரத்த ஓட்டத்தினை அதிகப்படுத்துகிறது. இதனால் முடி வளரும் போதே மிகவும் வலிமையாகவும் வேகமாகவும் வளருகிறது.
மேலும் இதில் உள்ள வைட்டமின் எ ,வைட்டமின் கே ,வைட்டமின் சி மற்றும் போலிக் ஆசிட் முடியினை மிகவும் பொலிவாக்குகிறது மற்றும் முடி கொட்டுவதையும் தடுக்கிறது.
கொய்யா இலை
கொய்யா இலை முடி உதிர்வதை வேகமாக நிறுத்த கூடிய குணம் உடையவை. இந்த கொய்யா இலையில் வைட்டமின் பி , வைட்டமின் சி போன்ற சத்துகளும் , நிறைய மினெரல்ஸ் சத்துகளும் உள்ளது. எனவே , இது முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தி முடி உதிர்வதை தடுக்கிறது.
புளிச்ச அரிசி கஞ்சி
புளிச்ச அரிசி காஞ்சி முடிக்கு ஒரு பொக்கிஷம் போன்றது ,நமது முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு அற்புதமான முடி வளர்ச்சி remedy இந்த புளிச்ச அரிசி கஞ்சி ஆகும்.
எனவே , இந்த கஞ்சி முடியினை மென்மையாகவும், பளபளப்பாகவும் வளர செய்கிறது. முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கிறது.
- Get link
- X
- Other Apps




Comments
Post a Comment